இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்


இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்
x
தினத்தந்தி 14 March 2019 11:03 PM GMT (Updated: 14 March 2019 11:03 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் நியமித்தது. இந்த நியமன விஷயம் தொடர்பான வழக்கில் கோர்ட்டுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா உதவிகரமாக செயல்பட்டார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக வக்கீல் பி.எஸ்.நரசிம்மாவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று நியமித்தது. நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, ஏ.எம்.ஸ்பாரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

Next Story