தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்


தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்
x
தினத்தந்தி 8 April 2019 11:39 AM GMT (Updated: 8 April 2019 11:39 AM GMT)

தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் குழந்தையுடன் மரணம் அடைந்தார்.

தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஒருவர், தனது குழந்தையுடன் கார் விபத்தில் உயிரிழந்தார். அந்த அணிக்காக 4 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் 25 வயதான எல்ரைசா தயுனிசன் போரி (Elriesa Theunissen-Fourie).

2013ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியிலும் அவர் இடம்பெற்று இருந்தார்.

அவர் தனது குழந்தையுடன் ஸ்டில்பாண்டின்  என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியதாகவும், தாயும், குழந்தையும் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு மீளாத்துயரத்தை அளிப்பதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Next Story