வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்


வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்
x
தினத்தந்தி 17 April 2019 10:05 PM GMT (Updated: 17 April 2019 10:05 PM GMT)

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

பார்படோஸ், 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் 3–வது அணியாக வங்காளதேசம் பங்கேற்கிறது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் பேட்ஸ்மேனான 38 வயது சர்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பேட்டிங் ஆலோசகராக இருப்பார் என்று தெரிகிறது. உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியினருடன் சர்வான் இங்கிலாந்து செல்வாரா? என்பது குறித்து எதுவும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.


Next Story