அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர்


அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர்
x
தினத்தந்தி 17 May 2019 5:15 AM GMT (Updated: 17 May 2019 5:15 AM GMT)

அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டி உள்ளார் கவுதம் கம்பீர்


ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு தொடர் தோல்விகளை சந்தித்த போது விராட் கோலியின் கேபட்ன்ஷிப் குறித்து கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு தொடர் தோல்விகளை சந்தித்த போது விராட் கோலியின் கேபட்ன்ஷிப் குறித்து கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணியின் கேப்டன் கோலி என்று வார்த்தை போரின் உச்சத்திற்கு எல்லாம் சென்றார்.

இந்த நிலையில் கேப்டன் கோலி குறித்து மீண்டும் சர்ச்சையான கருத்தை கம்பீர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். கோப்பையை வென்ற ரோகித் சர்மா மற்றும் டோனியுடன் கோலியை ஒப்பிட முடியாது.

ரோகித் தற்போது கேப்டன் பொறுப்பில்  திறமையாக செயல்படுகிறார். அடுத்த கேப்டன் ரோகித் தான் என நாட்டுக்கே தெரியும். ஆசியா கோப்பையை கேப்டனாக இருந்து வென்றுள்ளார். கட்டாயம் அவர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என காம்பீர் தெரிவித்துள்ளார்.

Next Story