கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: சச்சின் தெண்டுல்கர் 16 வருட சாதனையை முறியடிப்பார்களா? + "||" + World Cup 2019: 5 batsmen who can break Sachin Tendulkar's 16-year-old record

உலக கோப்பை கிரிக்கெட்: சச்சின் தெண்டுல்கர் 16 வருட சாதனையை முறியடிப்பார்களா?

உலக கோப்பை கிரிக்கெட்: சச்சின் தெண்டுல்கர் 16 வருட சாதனையை முறியடிப்பார்களா?
உலக கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இந்த தொடரில் யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த கிரிக்கெட் திருவிழாவாக இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது உலகக்கோப்பை.  உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் 16 வருடங்களுக்கு முன் சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இந்த உலகக்கோப்பை தொடரில் யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கிவிட்டது.

2003 உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் அடித்தார் சச்சின் தெண்டுல்கர். இதுவே உலகக்கோப்பை தொடரில் தனி நபர் அடித்த அதிக ரன்கள் ஆகும். 2003-ம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய இந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. 2003 உலகக்கோப்பை தொடரில் ஒரு சதம், 6 அரை சதங்களை அடித்துள்ளார் சச்சின்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சில வீரர்கள் இந்த தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அவரை தொடர்ந்து இங்கிலாந்தின் ஜானி பயர்ஸ்டோ, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வெஸ்ட் இன்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர். 

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த டாப் 4 வீரர்கள்

சச்சின் தெண்டுல்கர்673-2003
மேத்யூவ் ஹேடன்659-2007
மஹேல ஜெயவர்தனே548-2007
மார்டின் குப்தில்      547-2015

தொடர்புடைய செய்திகள்

1. உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
2. உலக கோப்பை கிரிக்கெட்: 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
3. வெஸ்ட்இண்டீசை வெளுத்து கட்டியது வங்காளதேசம்: ஷகிப் அல்-ஹசன் சதம் அடித்தார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. ஷகிப் அல்-ஹசன் சதம் அடித்து அசத்தினார்.
4. உங்க பேட் தான் அவுட்டுக்கு காரணம் : கண்டுபிடித்த டோனி - கோபத்தில் கோலி
கோலி பயன்படுத்தி வரும் 'பேட்' தான் நேற்று அவர் அவுட்டாக காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தற்போது செம கடுப்பில் இருக்கிறார்.
5. மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா - ரோகித் சர்மா சதம் விளாசினார்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஊதித்தள்ளி அபார வெற்றி பெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...