கிரிக்கெட்

வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் + "||" + Keen to continue the success of the England team - Today's clash with Afghanistan

வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 20-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.


இங்கிலாந்து அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் முதுகுவலி காரணமாகவும், தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் தசைப்பிடிப்பினாலும் பாதியில் வெளியேறினர். காயம் குணமடையாததால் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இந்த ஆட்டம் மற்றும் அடுத்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் இயான் மோர்கனின் வலி குறைந்து இருக்கிறது. இருப்பினும் அவர் களம் இறங்குவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஜாசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்கலாம். தங்களது வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணியினர் செயல்படுவார்கள்.

குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. முகமது நபி, ரஷித் கான் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்கின்றனர். சுழற்பந்து வீச்சு எடுபடும் இந்த ஆடுகளத்தில் அவர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள்.

வெற்றியை தொடர இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். வெற்றி கணக்கை தொடங்க ஆப்கானிஸ்தான் அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் சொந்த மண்ணில் ஆடும் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி சமாளிப்பது கடினம் தான்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, வினாடி- வினா போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது.
2. ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு
ஆஷஸ் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்: 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
4. இந்தியாவும் பிற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் - டொனால்ட் டிரம்ப்
இந்தியாவும் பிற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கேட்டு கொண்டு உள்ளார்.
5. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷஜாத்துக்கு 1 ஆண்டு தடை
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஷஜாத் பலமுறை நடத்தை விதிகளை மீறியுள்ளார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.