கிரிக்கெட்

கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு + "||" + West Indies selection committee rejected Gayle's request

கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு

கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு
கெய்லின் கோரிக்கையை வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு நிராகரித்தது.
செயின்ட் ஜான்ஸ்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. ஒரு நாள் தொடர் முடிவடைந்ததும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.


இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டியின் போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசைப்படுவதாக அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் கூறியிருந்தார். ஆனால் அவர் டெஸ்ட் போட்டி விளையாடி 4 ஆண்டுகள் ஆகி விட்டது. அவரது கோரிக்கையை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர். அதே சமயம் அணியில் புதுமுக சுழற்பந்து வீச்சாளராக 26 வயதான ரகீம் கார்ன்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர். 55 முதல்தர போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளும், 2,224 ரன்களும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது வலது கையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-

ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், கேப்ரியல், ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கெமார் ரோச்.