கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு + "||" + India vs Bangladesh 1st Test Day 1 LIVE Score: Bangladesh Win Toss, Elect To Bat Against India

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்:  இந்திய அணி முதலில் பந்து வீச்சு
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீசி வருகிறது.
இந்தூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்காளதேச கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.  
விராட் கோலி தலைமையிலான இந்தியா, டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ்கிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. எனவே, இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனையை தொடரும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
3. இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு
இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவீடன் அரச தம்பதி பிரதமர் மோடியை சந்தித்தனர்.
4. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பு
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை
3 நாள்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.