கிரிக்கெட்

வளரும் அணிக்கான ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி + "||" + Asian cricket for developing team: India lose to Pakistan

வளரும் அணிக்கான ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி

வளரும் அணிக்கான ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி
வளரும் அணிக்கான ஆசிய கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா அணி தோல்வியடைந்தது.
டாக்கா,

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வெற்றியை நோக்கியே பயணித்தது. கடைசி 5 ஓவர்களில் 26 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் இறுதி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசி மடக்கினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவை என்ற நிலையில், இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்னே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சன்விர் சிங் 76 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி நாளை மறுதினம் நடக்கும் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.