இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி இன்று தேர்வு


இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி இன்று தேர்வு
x

இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி,

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவுக்கு வந்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 5-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 14-ந்தேதி முதல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று (திங்கட்கிழமை) தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தற்போதைய தேர்வு கமிட்டியினரின் கடைசி அணித் தேர்வு இதுவாகும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடல்தகுதி விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story