கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் + "||" + Cricket T20: Pakistan defeated Bangladesh

20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
லாகூர்,

பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 65 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும், முகமது ஹபீஸ் 67 ரன்களும் விளாசி களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டி கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் லாகூரில் நாளை நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
2. எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி
எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
3. 20 ஓவர் போட்டி தரவரிசைப் பட்டியல்: கே.எல்.ராகுல்,ரோகித் சர்மா முன்னேற்றம்!
இருபது ஓவர் போட்டி தரவரிசைப்பட்டியலில் கே.எல் .ராகுல் 2-வது இடத்திற்கும், ரோகித் சர்மா 10-வது இடத்திற்கும் முன்னேற்றம்!
4. 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.
5. 20 ஓவர் கிரிக்கெட்: திருவள்ளூர் அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ராம் அரவிந்த் சதத்தால் திருவள்ளூர் அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.