கடினமான சூழ்நிலையை கையாளக் கற்றுக்கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் - டோனி


கடினமான சூழ்நிலையை கையாளக் கற்றுக்கொடுத்தது சென்னை  சூப்பர்  கிங்ஸ் அணி தான் - டோனி
x
தினத்தந்தி 4 March 2020 12:28 PM GMT (Updated: 4 March 2020 1:00 PM GMT)

கடினமான சூழ்நிலையை கையாளக் கற்றுக்கொடுத்தது ஐபிஎல் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறி உள்ளார்.

சென்னை

நடப்பு ஐ.பி.எல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பயின் மும்பை அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் ககிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் டொனி இடம்பெறவில்லை. ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவதை கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த டோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவிக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த பயணம் 2008-ல் தொடங்கியது. சென்னை சுப்ப்ர் கிங்ஸ் அணி களத்திலும் களத்திற்கு வெளியிலும் ஒரு மனிதனாக, கிரிக்கெட் வீரராக எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள உதவியது.

சென்னை ரசிகர்கள் யாரும் என்னை பெயர் சொல்லி அழைப்பதே இல்லை. தல என்று தான் அழைக்கிறார்கள். தல என்று அழைக்கும் போது அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதை, அன்பு தான் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது என்று கூறினார்.

Next Story