ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? - நாளை மறுதினம் ஆலோசனை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசனை நடைபெற உள்ளது.
மும்பை,
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி திட்டமிடப்படி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டு இருப்பதால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் இந்த போட்டியை நடத்துவது உகந்தது அல்ல என்று சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மராட்டிய அரசாங்கம், ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்க வேண்டும் அல்லது டிக்கெட் விற்பனை இன்றி (ரசிகர்கள் இல்லாமல்) நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நாளை மறுதினம் அவசரமாக கூடி ஆலோசிக்க உள்ளது. இதன் முடிவில் ஐ.பி.எல். போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது தெரிய வரும்.

Related Tags :
Next Story