புஜாரா, ஷிகர் தவன், கோலி ஆகியோரிடம் நீண்ட நேரம் நேரத்தைச் செலவிடுவேன் - அஸ்வின்


புஜாரா, ஷிகர் தவன், கோலி ஆகியோரிடம் நீண்ட நேரம் நேரத்தைச் செலவிடுவேன் - அஸ்வின்
x
தினத்தந்தி 6 May 2020 5:59 AM GMT (Updated: 6 May 2020 5:59 AM GMT)

புஜாரா, ஷிகர் தவன், கோலி ஆகியோரிடம் நீண்ட நேரம் நேரத்தைச் செலவிடுவேன் என சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கூறியுள்ளார்.

மும்பை,

சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின்  பேட்டியில் கூறியதாவது:

ஒவ்வொரு முறையும் ஐந்து விக்கெட்டுகள் எடுக்கும்போது ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்து எனக்கு வழங்கப்படும். சிறப்பாக விளையாடும்போது ஸ்டம்புகளை எடுத்துவைத்துக்கொள்வேன். இதனால் என் வீடு முழுக்க நினைவுப் பரிசுகளால் நிறைந்துள்ளது.

புஜாரா, ஷிகர் தவன், கோலி ஆகியோரிடம் நீண்ட நேரம் நேரத்தைச் செலவிடுவேன். தவன் ஜாலியாகப் பேசக்கூடியவர். விராட் கோலியுடன் எப்போதும் சுவாரசியமான உரையாடல் அமையும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னால் மறக்க முடியாத தருணம் என்றால், 2016 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 235 ரன்களும் 17 விக்கெட்டுகளும் எடுத்தேன். அதேபோல ஒருநாள் போட்டியில் 2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை வென்றதை மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

33 வயதான அஸ்வின் இதுவரை 71 டெஸ்டுகளில் ஆடி 365 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

Next Story