சில கிரிக்கெட் வீரர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்தார்கள் - ஸ்ரீசாந்த்


சில கிரிக்கெட் வீரர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்தார்கள் - ஸ்ரீசாந்த்
x
தினத்தந்தி 11 May 2020 11:52 AM GMT (Updated: 11 May 2020 11:52 AM GMT)

தடை காலத்தில் இருக்கும் போது சில கிரிக்கெட் வீரர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்தார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தநிலையில் ஸ்ரீசாந்த் பேட்டி ஒன்றில் கூறியதாவது:- 

டுவிட்டரில் சச்சினுடன் சமீபத்தில் பேசினேன். சேவாக், லக்‌ஷ்மண் மற்றும் சிலரைத் தவிர பல வீரர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்த்தார்கள். அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டேன். 

வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் நானும் அவர்களிடம் பேச முயற்சி எடுக்கவில்லை. கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. ஹர்பஜன் சிங்கை விமான நிலையத்தில் சந்தித்தேன். 

நான் மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்போது உங்களுடைய பஜ்ஜி ஸ்போர்ட்ஸ் தயாரிக்கும் பேட்களையே பயன்படுத்துவேன் என்றேன். என்றாவது ஒருநாள் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன்.

முதலில் கேரள அணிக்காக விளையாட வேண்டும். அதில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். இந்திய அணியில் மீண்டும் நுழைய என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் முயற்சி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீசாந்த் கடைசியாக 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Next Story