அர்ஜூனா விருதுக்கு 2 வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ திட்டம்


அர்ஜூனா விருதுக்கு 2 வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ திட்டம்
x
தினத்தந்தி 12 May 2020 12:34 PM GMT (Updated: 12 May 2020 12:34 PM GMT)

அர்ஜூனா விருதுக்கு 2 வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா, பூனம் யாதவ் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இருவரும் சிறப்பாக விளையாடியதால் அவர்களுடைய பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 3-ம் தேதிக்குள் விளையாட்டுச் சங்கங்கள் தங்களுடைய பரிந்துரையை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story