கிரிக்கெட்

பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை - ரோகித் சர்மா + "||" + Bangladesh is The Only Place Where we Don’t Get Any Support: Rohit Sharma

பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை - ரோகித் சர்மா

பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை - ரோகித் சர்மா
பங்களாதேசத்தில் மட்டும் தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர்களை  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வானில் இருந்து குதித்த தேவர்களை போல பார்க்கிறார்கள். சிறுவர்கள் தங்கள் ஆதர்ஷ புருஷர்களாக அவர்களை பார்த்தவுடன் ஆராதிக்கிறார்கள். இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக அளவில் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமை இது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு.

இந்நிலையில், ரோகித் சர்மா. பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பாலுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ரோகித் சர்மா கூறியதாவது:

இந்தியாவிலும் பங்களாதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். பங்களாதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும்.

 ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் பங்களாதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள பங்களாதேஷ் அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு
ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
2. இந்தியா இரண்டு உலகக் கோப்பைகளாவது வெல்ல வேண்டும் - ரோகித் சர்மா
இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பைகளாவது வெல்ல வேண்டும் என சுரேஷ் ரெய்னாவிடம் ரோகித் சர்மா வலியுறுத்தினார்.
3. ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு டோனியே காரணம் - கம்பீர் சொல்கிறார்
ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு டோனியே காரணம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
4. ரோகித் சர்மாவுக்கு குடைச்சல் கொடுத்த 2 பவுலர்கள்
ரோகித் சர்மாவுக்கு குடைச்சல் கொடுத்த 2 பவுலர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் - ரோகித் சர்மா
அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.