தென்ஆப்பிரிக்க மண்ணில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியா திட்டம்


தென்ஆப்பிரிக்க மண்ணில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியா திட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 5:18 AM GMT (Updated: 22 May 2020 5:18 AM GMT)

தென்ஆப்பிரிக்க மண்ணில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியா திட்டமிட்டுள்ளது.

கேப்டவுன், 

கொரோனா வைரஸ் அச்சத்தால் பல போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டதால் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் நாட்டுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடும்படி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் கிரேமி சுமித், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி அழைப்பு விடுத்தார். தென்ஆப்பிரிக்காவின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நகர்ந்தால் ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடும். கொரோனா பரவலை தடுக்க இரு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தற்போதைய கடினமான நிலைமை சீரடைந்து இரு நாட்டு அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அனுமதித்தால் மட்டுமே இந்த போட்டி நடைபெறும். ஆகஸ்டு மாதம் நடக்காவிட்டால் பிறகு ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் இந்த தொடரில் விளையாடவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

Next Story