ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - கம்பீர் கருத்து


ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 31 Aug 2020 11:00 PM GMT (Updated: 31 Aug 2020 8:33 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகி இருப்பதால் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருந்து வரும் டோனி 3-வது வரிசையில் இறங்கினால் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை பெறுவதுடன் அணியின் பேட்டிங்குக்கும் வலுசேர்க்க முடியும். இந்த நல்ல வாய்ப்பை டோனி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Next Story