கிரிக்கெட்

அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்குகிறார், ஷாருக்கான் + "||" + Shah Rukh Khan buys cricket team in US

அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்குகிறார், ஷாருக்கான்

அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்குகிறார், ஷாருக்கான்
அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை இந்தி நடிகர் ஷாருக்கான் வாங்குகிறார்.
நியூயார்க்,

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த 6 அணிகள் பங்கேற்கும் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) என்ற பெயரில் 20 ஓவர் லீக் போட்டி 2022-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா ஆகியோரை உரிமையாளராக கொண்ட தி நைட் ரைடர்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. போட்டியை நடத்தும் அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் நைட் ரைடர்ஸ், போட்டியின் வளர்ச்சிக்கும், அதை முன்னெடுத்து செல்லவும் பல்வேறு ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுத்து கொடுக்க உள்ளது. அத்துடன் நைட் ரைடர்ஸ் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கி நிர்வகிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நைட் ரைடர்ஸ் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், ‘அமெரிக்காவில் அடுத்த சில ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த 6 கிரிக்கெட் மைதானங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சர்வதேச போட்டிகளையும், உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளையும் அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பதே குறிக்கோளாகும். இங்கு விளையாட்டுக்குரிய நல்லசூழல் நிலவுகிறது’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சி.பி.எல். கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளராக உள்ள ஷாருக்கான் இப்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால்பதிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
2. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார்.
3. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் மறைவு
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் காலமானார்.
4. வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்
அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ஜோ பைடனை நியமனம் செய்து இருந்தார்.
5. அமெரிக்காவில் பொருளாதார நிவாரண தொகையை உயர்த்தி வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு
அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் பொருளாதார நிவாரண தொகையை மூன்று மடங்கு உயர்த்தி வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.