கிரிக்கெட்

சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு + "||" + Injury by Chennai team's bowling coach Corona

சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. நல்லவேளையாக அணி வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

கொரோனா பாதிப்பை சந்தித்து இருக்கும் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளின் அடுத்த லீக் ஆட்டங்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழி பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
சீர்காழி பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
2. நாகையில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கலெக்டர் பிரவீன் நாயர் திறந்து வைத்தார்
நாகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை கலெக்டர் பிரவீன் நாயர் திறந்து வைத்தார்.
3. 17 போலீஸ் நிலையங்களில் பணி புரியும் போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
17 போலீஸ் நிலையங்களில் பணி புரியும் போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வழங்கினார்.
4. மராட்டியம் 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளது: சிவசேனா
மராட்டியம் 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளதாக சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.