நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; ரசிகர்களை அனுமதிக்க பாக்.கிரிக்கெட் வரியம் முடிவு


நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; ரசிகர்களை அனுமதிக்க பாக்.கிரிக்கெட் வரியம் முடிவு
x
தினத்தந்தி 30 Aug 2021 4:01 PM GMT (Updated: 30 Aug 2021 4:01 PM GMT)

18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இஸ்லமாபாத்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், இதற்கு முன்பாக நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் பார்வையாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 25 சதவீதம்  ரசிகர்களை அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட ரசிகர்கள் மட்டுமே கிரிக்கெட் போட்டியை காண அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 


Next Story