அஸ்வினைக் கண்டித்த டோனி: வீரேந்திர சேவாக் மனம் திறப்பு


அஸ்வினைக் கண்டித்த டோனி: வீரேந்திர சேவாக் மனம் திறப்பு
x
தினத்தந்தி 2 Oct 2021 3:01 AM GMT (Updated: 2 Oct 2021 3:01 AM GMT)

களத்தில் என்ன நடந்தாலும், அதை வெளியே கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. இது ஒவ்வொரு வீரரின் பொறுப்பாகும் என சேவாக் கூறியுள்ளார்.

கடந்த 2014- ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடினார். அப்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மேக்ஸ்வெல்லை ஆட்டமிழக்க செய்த அஸ்வின், அவர் மீது தூசியை ஊதி செண்ட் ஆஃப் செய்ததாகவும், அஸ்வினின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த கேப்டன் டோனி, உடனடியாக அவரை கண்டித்ததாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.  

இணைய தளம் ஒன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில் கூறியதாவது;-   2014- ஆம் ஆண்டு நான் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஒரு  ஆட்டத்தில் மேக்ஸ்வெல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அப்போது, அஸ்வின் தரையிலிருந்து தூசியை எடுத்து ஊதிவிட்டு, அவரை சென்ட் ஆஃப் செய்தார். நான் எதிர்முனையில் அப்போது நின்று கொண்டிருந்தேன்.  அஸ்வின் செயலைப் பார்த்து டோனி அப்போது கோபப்பட்டு, கண்டித்தார்” என்றார். 


Next Story