கிரிக்கெட்

இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை + "||" + Former player Miandad idea for Pakistan to beat India

இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை

இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை
இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு அதன் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.
கராச்சி,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் களம் இறங்குகின்றன. இலங்கை, வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, நமிபியா ஆகிய 8 அணிகள் முதல் சுற்றில் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந்தேதி துபாயில் சந்திக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை. இந்த தடவை அந்த சோகத்துக்கு முடிவுகட்டும் வேட்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தானுக்கு முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

மியாண்டட் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான மோதல் இந்த தொடரில் உத்வேகத்தை பெறுவதற்கு பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஆட்டமாக இருக்கும். இந்தியா மிகவும் வலுவான அணி. சில முன்னணி வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் நாங்கள் எந்தவித அச்சமும், நெருக்கடியும் இன்றி விளையாடுவதுடன் ஒவ்வொருவரும் பங்களிப்பை அளித்தால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும். 

20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு வீரர்கள் தான் ஆட்டத்தில் வெற்றி தேடி தர முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அணியின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். இன்னிங்சில் ஒரு வீரரின் 20 ரன் அல்லது முக்கியமான கேட்ச், ரன்-அவுட், ஒரு சிறந்த ஓவர் கூட ஆட்டத்தில் வெற்றியை தீர்மானித்து விடும். எனவே அணியில் உள்ள ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்
தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
2. இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..!
நாம் நமது கால்களை தரையில் வைத்து சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
3. இம்ரான் கானை மூத்த சகோதரர் என்பதா? சித்து மீது பாஜக பாய்ச்சல்
பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் எனக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. ஒட்டுமொத்த அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும்: ரோகித், டிராவிட் பேட்டி..!
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
5. இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி: கேன் வில்லியம்சன் விலகல்...!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.