ஹர்திக் பாண்ட்யா காயம் பயப்படும்படி இல்லை: இந்திய கிரிக்கெட் வாரியம்


ஹர்திக் பாண்ட்யா காயம் பயப்படும்படி இல்லை: இந்திய கிரிக்கெட் வாரியம்
x
தினத்தந்தி 26 Oct 2021 9:54 PM GMT (Updated: 26 Oct 2021 9:54 PM GMT)

ஹர்திக் பாண்ட்யா காயம் பயப்படும்படி இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ‘ஷாட் பிட்ச்’ பந்து ஒன்று தோள்பட்டையில் தாக்கியது. இதனால் அசவுகரியமாக உணர்ந்த பாண்ட்யா லேசான வலியுடன் பேட்டிங் செய்து 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து உடனடியாக ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘ஹர்திக் பாண்ட்யாவின் ஸ்கேன் பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. காயம் பயப்படும்படி இல்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இந்தியாவின் அடுத்த லீக் ஆட்டத்துக்கு இன்னும் 5 நாட்கள் இடைவெளி உள்ளதால் அது அவர் குணமடைவதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, பயிற்சியின் போது அவர் எத்தகைய நிலையில் இருக்கிறார் என்பதை பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வரும்’ என்றார். வருகிற 31-ந்தேதி நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாண்ட்யா களம் காண வாய்ப்புள்ளது.


Next Story