கிரிக்கெட்

நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை + "||" + Day 4 end: New Zealand need 280 runs to win

நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை

நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கான்பூர்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து  அணி 296- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஒரு விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து மொத்தம் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி தடுமாற்றம் கண்டது. முன்வரிசை பேட்ஸ்மேன்களான புஜரா, கேப்டன் ரகானே, மயங்க் அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் பின்வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சாகா ஆகியோரின் அரைசதம் மற்றும் அஸ்வின், அக்சர் படேலின் பங்களிப்புடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

 இறுதியில் இந்திய அணி 81 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள்: 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
2. முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
3. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: தென் ஆப்ரிக்காவின் முக்கிய வீரர் வெளியேற்றம்..!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
4. இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.
5. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா? - நிபுணர் பதில்
இந்தியாவில் தொடர்ந்து தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.