கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க 'ஏ'அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய ஏ அணி 276 ரன்களில் ஆல் அவுட் + "||" + 2nd Test against South Africa 'A': India A all out for 274 runs

தென்ஆப்பிரிக்க 'ஏ'அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய ஏ அணி 276 ரன்களில் ஆல் அவுட்

தென்ஆப்பிரிக்க 'ஏ'அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய ஏ அணி 276 ரன்களில் ஆல் அவுட்
முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
ப்ளூம்போண்டைன் ,  

 இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளும் மோதும் 2-வது  டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க ஏ அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்தார். 

இந்திய 'ஏ'  சார்பில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது  முதல் இன்னிங்சில்  விளையாடிய இந்திய ஏ அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இந்திய 'ஏ' சார்பில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டமான இன்று தென் ஆப்பிரிக்க ஏ அணி 21 ரன்கள்( முன்னிலை )பெற்று  இரண்டாவது இன்னிங்சில் விளையாடி  வருகிறது .

தொடர்புடைய செய்திகள்

1. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமனம்
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.