லங்கா பிரீமியர் லீக்:கண்டி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது கலே கிளாடியேட்டர்ஸ் அணி


லங்கா பிரீமியர் லீக்:கண்டி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது கலே  கிளாடியேட்டர்ஸ் அணி
x
தினத்தந்தி 8 Dec 2021 4:18 AM GMT (Updated: 8 Dec 2021 4:18 AM GMT)

கண்டி வாரியர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கலே கிளாடியேட்டர்ஸ் அணி.

கொழும்பு ,

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தான் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசன் நடத்தப்பட்டது.இதில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடர் போன்றே இந்த  லீக்கிலும்  பல்வேறு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.கொழும்பு ஸ்டார்ஸ் , டம்புல்லா ஜியாண்ட்ஸ் , கலே  கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா கிங்ஸ் , கண்டி  வாரியர்ஸ்  ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.

இதில் நேற்று இரவு நடந்த போட்டியில் கண்டி  வாரியர்ஸ் - கலே  கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.முதலில் பேட்டிங் செய்த கண்டி  வாரியர்ஸ்  அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அகமது சேசாத் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

144 ரன்கள் இலக்குடன் பேட்டிங்  செய்ய தொடங்கியது  கலே   கிளாடியேட்டர்ஸ் அணி.அந்த அணியில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர் குணத்திலாகா 33 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கண்டி  வாரியர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கலே   கிளாடியேட்டர்ஸ் அணி.

Next Story