விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
x
தினத்தந்தி 9 Dec 2021 8:31 PM GMT (Updated: 9 Dec 2021 8:31 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பரோடாவுடன் மோதிய மும்பை அணி வெற்றி பெற்றது.

திருவனந்தபுரம், 


20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ராஜ்கோட் உள்பட 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் ‘எலைட் பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, பரோடாவை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய பரோடா அணி 49.1 ஓவர்களில் 210 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 

தொடர்ந்து ஆடிய மும்பை அணி 23 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 41 ரன்னுடனும், கேப்டன் ஷம்ஸ் முலானி 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

மழை பாதிப்பை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வி.ஜெ.டி. விதிமுறைப்படி மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி முதல் வெற்றியை தனதாக்கியது. பரோடா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

Next Story