19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்


19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 25 Dec 2021 2:35 PM GMT (Updated: 2021-12-25T20:05:05+05:30)

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.

துபாய்,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஆரத்ய யாதவ் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் சோபிக்காததால், அணியின் ஸ்கோரை உயரவில்லை. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜீசன் சமீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் பறிகொடுத்தாலும், கடைசி வரை போராடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கடைசி பந்து வரை சென்றது. இறுதியில் பாகிஸ்தான் அணி போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. 81 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய முகம்மது சக்சாத் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


Next Story