தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 157-2


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 157-2
x
தினத்தந்தி 26 Dec 2021 1:17 PM GMT (Updated: 2021-12-26T18:47:35+05:30)

தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது.

செஞ்சூரியன், 

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். இருவரும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா எதிர்கொண்ட முதல் பந்திலேயே கீகன் பீட்டர்சனிடம் கேட்சாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கோலி, ராகுலுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது.


Next Story