சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் - பிசிசிஐ கண்டனம்


சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் - பிசிசிஐ கண்டனம்
x
தினத்தந்தி 22 Feb 2022 5:47 PM GMT (Updated: 22 Feb 2022 5:47 PM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த பத்திரிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அண்மையில் அறிவிக்கப்பட்ட இலங்கை-இந்தியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா இடம் பெறவில்லை. 

இந்த நிலையில் அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அதை சாஹா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து  சாஹாவுக்கு எதிரான மிரட்டலுக்கு இன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் குறிப்பிட்ட பத்திரிக்கையாளருக்கு எதிராக பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதை ஆதரிக்கவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Next Story