இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ஹசரங்கா, மெண்டிஸ் விலகல்


இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ஹசரங்கா, மெண்டிஸ் விலகல்
x
தினத்தந்தி 25 Feb 2022 2:08 PM GMT (Updated: 25 Feb 2022 2:08 PM GMT)

காயம் காரணமாக இலங்கை அணியின் மெண்டிஸ், தீக்சனா ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

லக்னோ,

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் மெண்டிஸ் , தீக்சனா ஆகியோர் விலகியுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வரும் ஹசராங்காவும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Next Story