ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு...!


Image Courtesy : Twitter @ShreyasIyer15
x
Image Courtesy : Twitter @ShreyasIyer15
தினத்தந்தி 14 March 2022 6:55 PM GMT (Updated: 14 March 2022 6:55 PM GMT)

பிப்ரவரி மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐ.சி.சி. விருதுக்கு வாக்களிக்க உரிமை பெற்ற கமிட்டியினர் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஐக்கிய அரபு அமீரக வீரர் விருதியா அரவிந்த், நேபாள வீரர் திபேந்திர சிங் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விருதை தன்வசப்படுத்தி உள்ளார். 

கடந்த மாதம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 27 வயதான ஸ்ரேயாஸ் தொடர்ந்து ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் அமெலி கெர் தட்டிச் சென்றார். இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கியதன் மூலம் 21 வயதான அமெலி கெர் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோரை ஓரங்கட்டி விருதை சொந்தமாக்கி இருக்கிறார்.

Next Story