2022 ஆசிய கோப்பை இலங்கையில் நடத்த முடிவு!


2022 ஆசிய கோப்பை இலங்கையில் நடத்த முடிவு!
x
தினத்தந்தி 19 March 2022 1:20 PM GMT (Updated: 19 March 2022 1:20 PM GMT)

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் டி20 முறையில் நடைபெறும்.

புதுடெல்லி,

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் டி20 முறையில் விளையாடப்படும் எனவும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசியக் கோப்பைப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும், ஆனால் கொரானா மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்திருந்தது.

இந்த ஆசிய கோப்பையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகள் என மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்கும்.

மேலும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடையே நடைபெறு உள்ளது.

ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா உள்ளது. 1984 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியா ஏழு முறை பட்டத்தை வென்றுள்ளது. ஐந்து பட்டங்களை வென்ற இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.


Next Story