எங்கள் பந்துவீச்சு சரியாக அமையவில்லை: மிதாலிராஜ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 March 2022 8:24 PM GMT (Updated: 19 March 2022 10:35 PM GMT)

ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பேட்டியில் கூறினார்.

ஆக்லாந்து,

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியை தழுவியது..

போட்டி முடிந்தபிறகு தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ‘நாங்கள் இன்னும் 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணியினரின் கை எங்களை விட ஓங்கி இருந்தது என்றே சொல்லலாம். 

தேவைப்படும் நேரங்களில் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு பீல்டர்கள் பக்கபலமாக இருக்கவில்லை. பந்து வீச்சு நன்றாக அமையாத நாட்களில் இதுவும் ஒன்றாகும்’ இவ்வாறு அவர் கூறினார்.


Next Story