ஒரே போட்டியில் இரு மெய்டன்கள்: ஹர்ஷல் படேல் புதிய சாதனை


ஒரே போட்டியில் இரு மெய்டன்கள்: ஹர்ஷல் படேல் புதிய  சாதனை
x
தினத்தந்தி 31 March 2022 9:29 AM GMT (Updated: 31 March 2022 9:29 AM GMT)

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.

மும்பை,

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.  இந்த போட்டியில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 2 மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும், இதில் இரு மெய்டன் ஓவர்களும் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு பெங்களூரு அணியின் முகமது சிராஜ் இதே கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 மெய்டன் வீசியிருந்தார். தற்போது அதே அணியை சேட்ந்த ஹர்ஷல் படேல் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.


Next Story