மும்பைக்கு எதிரான வெற்றி; இது தான் திருப்புமுனையாக அமைந்தது - சஞ்சு சாம்சன்


மும்பைக்கு எதிரான வெற்றி; இது தான் திருப்புமுனையாக அமைந்தது - சஞ்சு சாம்சன்
x

Image Courtesy: Twitter 

ஐ.பி.எல். தொட்ரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது, இந்த போட்டியில் டாஸ் தான் திருப்புமுனையாக அமைந்ததாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் பந்து நின்று வருவதாக ஆரம்பத்திலேயே உணர்ந்தோம். பவுல்ட் மற்றும் பர்கர் ஆகியோர் அவர்களது அனுபவத்தை பயன்படுத்தி எங்களுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இவ்வளவு சீக்கிரமாக 4-5 விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இருப்பினும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தனர். எங்களது அணியில் உள்ள அனைவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள். அந்த வகையில் இந்த போட்டியின் போது அனைவருமே தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக சஹால் எங்களது அணிக்காக கடந்த 2-3 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story