கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு


கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 21 April 2024 9:33 AM GMT (Updated: 21 April 2024 11:27 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story