ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி - ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி - ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x

  Image Courtesy: ICC Twitter

முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

டவுன்ஸ்வில்லி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அந்த தொடரின் முதலாவது போட்டி ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கயா மற்றும் மருமானி ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கயா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடிய மருமானி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் ஆனார்.

முன்யோங்கா 7 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. அந்த அணியில் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆரோன் பின்ச் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வார்னருடன் ஸ்டீவ் ஸ்மித் இணைந்தார். இந்த இணை மிகச்சிறப்பாக ஆடியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் அரைசதம் அடித்தார். அவர் 57 ரன்களில் இருந்த போது சிக்கந்தர் ராசாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (10 ரன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (19 ரன்), மிட்செல் மார்ஷ் (2 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஸ்மித் 48 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 9 பந்துகளில் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் ஆகஸ்ட்-31 அன்று நடைபெறுகிறது.


Next Story