ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டி: விராட் கோலி விலகல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார் .
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story