முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி விட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

சூர்யகுமார் யாதவ் 24 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஸ்ரேயஸ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும் அவுட்டாகினர்.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story