சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை - இந்திய வீராங்கனைகளின் இடம் என்ன?


சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை - இந்திய வீராங்கனைகளின் இடம் என்ன?
x

Image Courtesy: @mandhana_smriti

சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தஹிலா (818 புள்ளிகள்) மற்றும் பெத் மூனி (733 புள்ளிகள்) உள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 6-வது இடத்திலும், ஜெமிமா 10-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் பேட்டிங் தரவைசையில் முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா வீராங்கனைகளை தவிர மற்ற நாட்டு வீராங்கனைகள் இடம் பெறவில்லை.

அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளிகள்) 3-வது இடம் பிடித்துள்ளார். முதல் இரு

இடங்களில் நியூசிலாந்தின் ஷோபி டெவின் ( 389 புள்ளி), வெஸ்ட் இண்டீசின் ஹெய்லீ மேத்யூஸ் ( 385 புள்ளி ) ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா (727 புள்ளிகள் )3-வது இடத்திலும், ரேணுகா சிங் ( 710 புள்லிகள் ) 5-வது இடத்திலும் உள்ளனர். முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஷோபி எக்ஸ்ல்ஸ்டோன் (763 புள்ளி), சாராக்ளென் (733 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.Next Story