ஐ.பி.எல்.: கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்.: கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 8 April 2024 1:34 PM GMT (Updated: 8 April 2024 1:43 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கெய்க்வாட் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி


Next Story