கடைசி டி20: இலங்கைக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா


கடைசி டி20: இலங்கைக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
x

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

பல்லேகல்லே,

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்த நிலையில் கடைசி டி20 போட்டியானது பல்லேகல்லே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். கேப்டன் பின்ச் 29 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும், ஸ்டோய்னிஸ் 38 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் தீக்‌ஷனா அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.


Next Story