பெண்கள் பிரிமீயர் லீக்: தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி..!!


பெண்கள் பிரிமீயர் லீக்: தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி..!!
x

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 51 (30) ரன்கள், யாஸ்திகா பாட்டீயா 44 (37) ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கார்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் டங்க்லி மற்றும் மேக்னா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டங்க்லி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கியவர்களும் மும்பை அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் ஜோஷி 7 (9) ரன்களும், சுஷ்மா வர்மா 18 (19) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக மேத்யூஸ் மற்றும் சீவர் பூருண்ட் 3 விக்கெட்டுகளும், அமிலியா கெர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.


Next Story