ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...சூர்யகுமார் யாதவ் பங்கேற்பதில் சிக்கல்..?


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...சூர்யகுமார் யாதவ் பங்கேற்பதில் சிக்கல்..?
x

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரரான சூர்யகுமார் யாதவ் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 3வது டி20 போட்டியில் பீல்டிங் செய்யும் போது சூர்யகுமார் யாதவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் குணமாக ஆறு வாரங்கள் ஆகும் என்பதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story