பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் விலகல் - காரணம் என்ன..?


பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் விலகல் - காரணம் என்ன..?
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னெர், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் ஆடி வருவதால் அந்த அணி மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் களம் இறங்குகிறது.

பாகிஸ்தான் அணி பாபர் ஆசம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர்களான பின் ஆலென் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டாம் பிளெண்டல் மற்றும் ஆல்-ரவுண்டர் சாக் போல்க்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



Next Story