டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து


டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து
x

image courtesty: ICC

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

கராச்சி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் 3 போட்டிகள் முறையே ஏப்ரல் 18, 20, 21-ந் தேதிகளில் ராவல்பிண்டியிலும் 4-வது, 5-வது போட்டிகள் முறையே 25, 27-ந் தேதிகளில் லாகூரிலும் நடைபெற உள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக நடக்கும் நியூசிலாந்தின் கடைசி 20 ஓவர் தொடர் என்பதால் இது அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story