டி.என்.பி.எல்: நெல்லை- சேலம் இடையிலான போட்டியில் மீண்டும் குறுக்கிட்ட மழை.!
சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டது.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும்சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த இந்த போட்டி மழையால் தாமதம் ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தற்போது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. முகமது கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மழையின் காரணமாக இந்த போட்டி இரண்டாவது முறையாக தடைபட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து போட்டி விரைவில் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.